கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பவுன்ஸ் (Bounce). எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Electric Mobility) நிறுவனமான இது தற்போது மின் வாகன உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போது அதன் முதல் தயாரிப்பான இன்ஃபினிட்டி இ1 (Infinity E1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் இந்தயாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.